வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் பழைய குரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 65). இவர் இன்று காலை பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கபட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட மனைவியுடன் வந்தார். பழனிசாமி ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டுந்தார்.
திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மனைவி மற்றும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கேயே இறந்துவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியபோது பழனிசாமி இதய நோயால் பாதிக்கப்படிருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.
இதுபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குபட்ட தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250-ல் கொண்டையம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி சின்ன பொண்ணு ( வயது 77) என்பவர் வாக்களிக்க வந்தார். அவர் வாக்கு செலுத்த சென்றபோது, மயங்கி விழுந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழிலேயே அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“