கோவிட் பணியின் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு மருத்துவர்கள் கைது

Two Doctors arrested for rape and sexual harassment during Covid camp Tamil News தி.நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மருத்துவர்கள் தங்கியிருந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வெற்றிச்செல்வன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Two Doctors arrested for rape and sexual harassment during Covid camp Tamil News
Two Doctors arrested for rape and sexual harassment during Covid camp Tamil News

Two Doctors arrested for rape and sexual harassment during Covid camp Tamil News : சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள், அங்குள்ள பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், மற்றொருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காகவும் சென்னை மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். டி நகரில் கோவிட் பணியின் போது அவர்கள் அனைவரும் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எஸ்.வெற்றி செல்வன் (35), என்.மோகன்ராஜ் (28) என அடையாளம் காணப்பட்டனர்.

டாக்டர் வெற்றி செல்வனும் அவருடன் வேலை பார்க்கும் பெண் மருத்துவரும் மற்றும் அவர்களுடன் தனிப்பட்ட வகையில் மருத்துவர்கள் குழுவும் கோவிட் பணியிலிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் நெறிமுறையின் ஒரு பகுதியாக, தி.நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மருத்துவர்கள் தங்கியிருந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வெற்றிச்செல்வன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதே வேளையில் மருத்துவர் மோகன்ராஜ் மற்றொரு பெண் மருத்துவரை பாலியல் சீண்டல் செய்தது தெரியவந்துள்ளது. தற்போது இந்த இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Two doctors arrested for rape and sexual harassment during covid camp tamil news

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express