/tamil-ie/media/media_files/uploads/2021/01/manjuvirattu.jpg)
Manjuvirattu Attack : தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி உலக புகழ்பெற்றது. இதில் தமிழகத்தில் தென்பகுதியான மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இந்திய மட்டுமல்லாது உலகளவில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.
இந்த போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வேலிக்கு உள்ளே காளைகளும் வீரர்களும் விளையாடும் ஆட்டத்தை, வேலிக்கு வெளியில் நின்று பொதுமக்கள கண்டுகளிப்பது வழக்கம். இதில் ஜல்லிக்கட்டு போலவே மஞ்சுவிரட்டு போட்டிக்கும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த போட்டி நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள் ஏதும் அமைக்கப்படாமல் திறந்த வெளியில் காளை அவிழ்த்துவிட்டு அதனை விரட்டி பிடிக்க வீரர்கள் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த போட்டிக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையையும் மீறி பல இடங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சிறுவயல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், 50 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 13 பேர் காயமடைந்துள்ளர். இவர்கள் அனைவரும், சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலத்த காயமடைந்த பெரியாமாச்சிப்பட்டியைச் சேர்ந்த எஸ் போஸ் (62), கல்லிப்பட்டுவைச் சேர்ந்த சி.பெரியகருப்பன் (80) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற இந்த போட்டி குறித்து நச்சியாபுரம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பட்டூருக்கு அருகே அமைந்துள்ள சிறுவயல் கிராமம், மஞ்சுவிரட்டு போட்டிக்கு பாரம்பரியமான இடமாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்குப் மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த மஞ்சுவிராட்டு போட்டியில், 250 காளைகள் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்காவைத் தவிர புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us