/tamil-ie/media/media_files/uploads/2023/03/Express-Image-4.jpg)
Source; Twitter/@Udhaystalin
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அருணாசலம் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலப் பணிகளுக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்விற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேயர்-உள்ளாட்சித்துறை அமைச்சராக பல்வேறு பாலங்களை அமைத்த தலைவர் @mkstalin அவர்கள், தற்போது முதலமைச்சராகி தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை-சிஐடி நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடியில் அமைக்கவுள்ள மேம்பால பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினோம்.@KN_NEHRUpic.twitter.com/sjdMvy9nGf
— Udhay (@Udhaystalin) March 8, 2023
இதை தொடர்ந்து, சென்னையில் 372 இடங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டப்பணியை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். சென்னையில் திரு.வி.க.நகர், ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டையில் ஆகிய இடங்களில் இந்த பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்கான திட்டச் செலவு 430 கோடி ரூபாய் என்றும், பராமரிப்பு ஒப்பந்தம் எட்டு ஆண்டுகளுக்கு என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.