விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் கலங்கல் ஓடையில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு மாணவின் உயிரிழந்தார். மற்றொரு மாணவியைத் தேடி வருகின்றனர்.
ஃபீஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையினால் விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்கள், கலங்கல் ஓடையில் அதிக வெல்நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள புது குப்பம் கொஞ்சமங்கலம் பொதுமக்கள் ஓடையில் குளிப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் கொஞ்சமங்கலம் பகுதி சேர்ந்த 4 மாணவிகள் புதுக்குப்பம் கலங்கல் ஓடையில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அனுஸ்ரீ இவரது தோழியான நர்மதா ஆகிய இருவரும் முதுகுப்பம் கலங்கல் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அப்பொழுது அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் நர்மதாவை மீட்டனர். இந்த நிலையில் அனுஷ்ஸ்ரீயை தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி நர்மதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மேலும், மற்றொரு மாணவியை அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“