தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியிருக்கிறார்கள். தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதன் செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், "2 அரசு மருத்துவர்கள், 2 ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள், 4 தனியார் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பணியில் இருந்த மேலும் 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”