கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா உறுதி!

கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 9,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 331 பேர் பலியாகியுள்ளனர். 1096 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் தலைமறைவு வாழ்க்கை : கண்காணிப்பை முடுக்கிவிடும் உளவுத்துறை தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியிருக்கிறார்கள். தனியார் […]

Corona, corona virus, Corona live updates

கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் இதுவரை 9,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 331 பேர் பலியாகியுள்ளனர். 1096 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் தலைமறைவு வாழ்க்கை : கண்காணிப்பை முடுக்கிவிடும் உளவுத்துறை

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியிருக்கிறார்கள். தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதன் செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், “2 அரசு மருத்துவர்கள், 2 ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள், 4 தனியார் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை : திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பணியில் இருந்த மேலும் 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Two govt doctors from coimbatore affected by corona virus

Next Story
தமிழகத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் தலைமறைவு வாழ்க்கை : கண்காணிப்பை முடுக்கிவிடும் உளவுத்துறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com