திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு சடலங்கள் இன்று காலை மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 30 மற்றும் 50 வயதுடைய இரண்டு பேரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“