scorecardresearch

இரட்டை இலை சின்ன வழக்கு.. டிடிவி தினகரனுக்கு மீண்டும் சம்மன்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்க இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

TTV-Dhinakaran

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில், ஏப்ரல் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கு’ அமலாக்க இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் ஏப்ரல் 12 அன்று சுமார் 8 மணி நேரம் பெடரல் ஏஜென்சியால் முதல் முறையாக டிடிவி தினகரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு, இரவு புதுதில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய தினகரன் செய்தியாளர்களிடம், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலம் ஏஜென்சியுடன் ஒத்துழைப்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில்’ அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு, சென்னை ஆர்.கே., நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தினகரன் அணிக்கு’ அதிமுகவின்’ இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தருவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் இருந்து பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 2017-ல் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தினகரனின் அத்தை சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் உரிமை கோரியதை அடுத்து அதிமுகவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தினகரனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே ரூ.50 கோடி பேரம் நடந்ததாகக் கூறி, தினகரனின் நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

50 கோடி கொடுத்தால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்று தருவதாக தினகரனிடம்’ சுகேஷ் உறுதி அளித்துள்ளார். பின்னர் தினகரன் தனது அத்தை வி.கே.சசிகலாவுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நிறுவி தற்போது அதன் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Two leaves symbol bribery case ed once again summoned ttv dhinakaran