New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/arrest-1.jpg)
25 year old man tried to marry college senior on moving bus
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஓட்டல் டீலக்ஸில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக டான்ஸ் பார் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது
25 year old man tried to marry college senior on moving bus
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஓட்டல் டீலக்ஸில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக டான்ஸ் பார் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டல் நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், " சென்னையில் டான்ஸ் பார் நடத்த லைசன்ஸ் வழங்குவதில்லை. எனவே, இங்கு சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், அவர் கூறுகையில் கைது செய்யப்பட்ட 10 பெண்களும் சென்னை சிட்டி போலிஸ் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, பின் ஸ்டேஷன் பெயில் மூலமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட இருவரிடமும் மேற்படி விசாரணை நடந்து வருவதாக கூறிய காவல்துறையினர், சமந்தப்பட்ட மற்ற நபர்கள், எத்தனை ஓட்டல்கள் இது போன்று சட்ட விரோத டான்ஸ் பார்களை நடத்துகின்றனர் போன்ற முழுமையான விவரங்கள் கூடிய விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.