/tamil-ie/media/media_files/uploads/2022/12/coimbatore-car-blast.1.1871509.jpg)
கோவை வெடி விபத்து வழக்கில் மேலும் இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த சனாபர் அலி, இதயத்துல்லா ஆகியோரை நேற்று காலை கைது செய்த என்.ஐ. ஏ அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே 9 பேரை கைது செய்த போலிசார்.
அதில் 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீண்டும் இருவரை கைது செய்துள்ளனர். என்.ஐ.ஏ விசாரணையில் தற்போது சில கைது தகவல்கள் வெளியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-29-at-10.32.04.jpeg)
மேலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.