சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் காவல்துறையினர் இரவு பகலாக 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டு வந்தவர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகக் கவசம், சானிடைசர்க்கு ஜி.எஸ்.டி எதிர்த்து வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. யாருக்கும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அங்கு கிருமி நாசினி அடித்துதூய்மை படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டார்கள். இந்நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே மதுரையில் போலீசார் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதால் காவல் நிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது. இப்போது சென்னையிலும் போலீசாருக்கு கொரோனா பரவி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. போலீசாரிடையே கொரோனா அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”