திருவள்ளூரில் பதுங்கியிருந்த நக்சல் தம்பதி கைது!

திருவள்ளூர் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் கணவன், மனைவியை இன்று சிறப்பு காவல் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

திருவள்ளூர் அருகே வனப்பகுதியில் நக்சல்கள் என சந்தேகிக்கப்படும் கணவன், மனைவியை இன்று சிறப்பு காவல் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே பூண்டி வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி, டிஎஸ்பி புகழேந்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அங்கு, புனரம்பாக்கம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த தசரதன் மற்றும் செண்பகவல்லியை போலீசார் கைது செய்தனர். அவர்களை தாலுகா அலுவலகத்தில் வைத்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Details Awaited..

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close