மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் வார நாள்களில் காலை 9 மணிக்கு மேல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பார்க்கிங் இடத்தில் தங்கள் வாகனத்தை விட்டுவிட வேண்டும். காத்திருப்பு நேரம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை இருக்கலாம்.
இருப்பினும், அதிக நேரம் காத்திருப்பவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள நங்கநல்லூர் ரோடு மெட்ரோவிலோ நிறுத்த தேர்வு செய்கின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், நங்கநல்லூர் மெட்ரோ ரயிலில் வாகனங்களை நிறுத்த பயணிகள் தயங்குகின்றனர்.
இந்த நிலையத்தில் 1,000 வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது. அவை காலை 11 மணிக்குள் நிரப்பப்படும். ஏர்போர்ட் மெட்ரோவில் பார்க்கிங் அதிக கட்டணம் என்பதால் விரும்பப்படுவதில்லை என்று பயணிகள் மேலும் தெரிவித்தனர். சி.எம்.ஆர்.எல் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, சென்னையில் உள்ள மொத்த மெட்ரோக்களில் 16,618 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3,496 கார்களை பார்க்கிங் செய்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூடுதலாக 30 ஆயிரம் பைக்குகள் மற்றும் 1000 கார்கள் வரை பார்க்கிங் செய்ய இடம் தேவைப்படுகிறது. மேலும், முகப்பேர், நொளம்பூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற பக்கத்து பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் மெட்ரோ சேவையை வழக்கமாகப் பயன்படுத்துவதால், இரண்டு நிலையங்களும் கூடுதல் பார்க்கிங் இடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“