தமிழ்நாட்டிற்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக, விஜயவாடா மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில்கள் அடுத்த மாதம் முதல் தனது பயணத்தை தொடங்குகின்றன. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரவிக்கின்றன.
இந்த ரயில்கள் குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும்.
மேலும், விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் எனவும் கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும்.
சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்
இந்த நிலையில் அடுத்த ரயில் சென்னை திருநெல்வேலி இடையே தனது பயணத்தை தொடங்க உள்ளது. இந்த ரயிலில், சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.
முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“