தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று பார் வசதியுடன் செயல்பட்டுவருகிறது. இந்த மதுபானக் கடையில், எதிரில் உள்ள மீன் மார்ககெட்டில் பணிபுரிந்த குப்புசாமி என்ற 60 வயது முதியவரும், விவேக் (30) என்பவரும் மது வாங்கி அருந்தியுள்ளார்.
இந்த நிலையில், குப்பு சாமி வாயில் நுரை தள்ளியபடி கீழே சரிந்து விழுந்தார். தொடர்ந்து, விவேக் என்ற இளைஞரும் உயிரிழந்தனர்.
இருவரும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு கடையில் மது வாங்கி குடித்து உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, இருவரின் உடல்களும் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அங்கிருந்த மதுவின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதுவில் விஷம்?
இதற்கிடையில் இருவர் அருந்திய டாஸ்மாக் மதுவில் விஷம் இருந்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தொடர்ந்து, குடும்ப பிரச்னை காரணமாக இது நடந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், இது குறித்து விரிவான விசாரணை நடந்துவருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிர் இழந்த ஈரம் காய்வதற்குள் அடுத்த சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“