தாய் கண் முன்னே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்: ‘இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’ - தலைவர்கள் கண்டனம்

“காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்றும் “வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?” என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்றும் “வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?” என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
EPS Anbumnai Nainar

திருவண்ணாமலையில், தாய் கண் முன்னே இளம்பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில், தாய் கண் முன்னே இளம்பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும், “காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்றும் “வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?” என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  திருவண்ணாமலையில், தாய் கண் முன்னே இளம்பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. 

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் தி.மு.க அரசு தலைகுனிய வேண்டும்.

மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

“வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “வேலியே பயிரை மேய்ந்த கதையாக…

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர், ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. ஆளும் தி.மு.க ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, பிற மாநிலப் பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்!

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே காமுகர்களாக உருமாறிவருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையில் இத்தனை ஒழுங்கீனங்களை வைத்துக்கொண்டு, வெற்று விளம்பரங்களில் மட்டுமே வீண் கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.” என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை  எவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டு இது தான். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை தி.மு.க அரசு இந்த அளவுக்கு சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக ஏந்தல் என்ற இடத்தில் சரக்குந்தை மறித்து சோதனை நடத்திய இரு காவலர்கள், அதில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர்.  சந்தைக்கு சென்று திரும்பும் போது அவர்களை அழைத்துச் செல்லும்படி சரக்குந்து ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக  ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தாயின் கண் எதிரிலேயே 19 வயது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு  தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு இது தான் சான்று. காவலர்களின் கடமை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது தான். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களே  சரக்குந்தில் சென்ற இரு பெண்களை மிரட்டி, இறக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால் காவல்துறையும், சட்டம் - ஒழுங்கும் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த  பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54% அதிகரித்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் தி.மு.க அரசு கவலைப்படாமல் இருந்ததன் விளைவு தான் இந்த கொடுமை ஆகும்.

தமிழ்நாட்டில் வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்திருப்பது தான்  திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.  சட்டம் - ஒழுங்கு சீர்குலைவில் இருந்து தமிழகத்தைக் காக்கவும்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள ஒரே வழி  தி.மு.க அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிக்கப் போவது உறுதி.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: