Advertisment

இஸ்லாமிய இளைஞர்களுடன் காதல்: திருச்சியில் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை!

இஸ்லாமிய இளைஞர்கள் உடனான காதலை பெற்றோர் எதிர்த்த நிலையில், இரண்டு சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

author-image
WebDesk
Jun 08, 2023 23:31 IST
Two TN sisters die by suicide after parental oppose interfaith relationships Police

தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்

திருச்சியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு காயத்ரி (23) மற்றும் வித்யா (21) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இஸ்லாம் மதத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் இவர்களிடம் பழகியுள்ளனர்.

Advertisment

இந்தப் பழக்கம் நாளடையில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், காயத்ரி மற்றும் வித்யா இருவரும் ஊர் திருவிழாவுக்கு வந்த போது தொடர்ந்து போனில் பேசியிருந்துள்ளனர்.

இதை கவனித்த பெற்றோர் அவர்களிடம் விசாரித்த போது அவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இது தொடர்பாக துவாரன்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment