மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்ருக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதற்காக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த திட்டம், தமிழ அரசால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 22 ஆம் தேதி முதல் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணபங்களை வாங்க, பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்றே (5.2.18) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பெற்று முழு விபரத்தையும் பூர்த்தி செய்த பெண்கள், இன்று மாலை 5 மணிக்குள் மண்டல அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

இதற்கான, முழு ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி நாளை முதல் தொடங்கி (6.2.18) வரும் 10-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையில், ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். ஜெயலலிதா பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றும் முன்னதாகவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

×Close
×Close