திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், சென்னையில் 6 ஊழல் வழக்குகள் தலைதூக்கி ஆடுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.
தற்போதைய தமிழக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், சென்னை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிமைத் திட்டங்கள் தொடர்பாக, 6 ஊழல் வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.
இதைப்பற்றி டைம்ஸ் அப் இந்தியாவில் குறிப்பிட்டுள்ளதாவது: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தால் ஒரு குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் பல முறைகேடுகளில், சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் துறை தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்று கவனிக்கப்படாத வழக்குகளில் ரூ.437 கோடி பேரூந்து நிழற்குடை ஊழல் அடங்கும், இதில் ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு ‘அறப்போர் இயக்கம்’ பணமோசடி மற்றும் டெண்டர்களை ஒதுக்குவதில் சாதகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
ரூ.1,000 கோடி மதிப்பிலான எம்-சாண்ட் ஊழல், பெருநகர சென்னை மாநகராட்சி ஆற்று மணல் விலைக்கு இணையாக எம்-சாண்ட் வைத்து ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது, இருப்பினும் இந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புதுறையின் புகார்களைத் தவிர, அதிக விலை கொடுத்து தெருவிளக்குகள் வாங்குவது, நீர்நிலைகளில் தெருவிளக்குகள் பொருத்துவது, புதிய விளம்பர நிறுவனங்களுக்கு பயோ மைனிங் டெண்டர்கள் வழங்கியது போன்றவற்றில் முறைகேடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கும் சென்னை மாநகராட்சியின் கண்காணிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த முறைகேடுகளை விசாரித்து, இதுவரை எந்த அதிகாரியும் கைது செய்யப்படவில்லை என்று தன்னார்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil