மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் லோகோ பைலட்டாக (ரயில் எஞ்ஜின் ஓட்டுநர்) ஆள்மாறாட்டம் செய்து, ஷாலிமார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸின் மாற்றுத் திறனாளி கோச்சில் பயணம் செய்தபோது ரயில்வே பாதுகாப்புப் படையினரால் ஈராட்டில் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 21 வயது இளைஞன் எஃபரில் இருவரும் ஆகஸ்ட் 12ம் தேதி பிடிபட்டனர். ரயில்களுக்கு சிக்னல் காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிவப்பு, பச்சை கொடிகள், டார்ச் விளக்குகள் மற்றும் லோகோ பைலட்களாக பெயர்கள் பொறித்த பேட்ஜ்களுடன் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் எஸ்.ஏ.சுனில் குமார் கூறுகையில், “இரண்டு பேரும் மூன்று வருடங்களுக்கு மேலாக ரயில்களை இயக்கி வருவதாக அவர்கள் கூறினார்கள்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில் குமார் கூறுகையில், “கிழக்கு ரயில்வேயில் உள்ள ஒரு லோகோ பைலட்தான் அவர்களுக்கு வேலை கொடுத்த்தாகத் தெரிவித்தனர். இது கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. லோகோ பைலட் அவர்களுக்கு பயிற்சி அளித்து, பயணிகள் ரயில்கள் உட்பட ரயில்களை இயக்க ஒருவரை அனுமதித்துள்ளார். அவர்கள் மாதத்திற்கு 8-10 நாட்கள் வேலை பெற்றுள்ளார்கள். கடந்த இரண்டு மாதங்களாக, அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே, கேரளாவுக்கு வருகை தர திட்டமிட்டனர். எஃபரிலின் மாமா அங்கே கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் ஆலுவாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் சுமார் இரண்டு மாதங்கள் ஆலுவாவில் தங்கியிருந்து சிறிது பணம் சம்பாதித்து மீண்டும் மேற்கு வங்கத்திற்கு செல்ல திட்டமிட்டனர்” என்று கூறினார்.
ரயில்வேயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வின்போது, இருவர் மாற்றுத்திறனாளி கோச்சில் பயணித்ததைக் கண்டறிந்ததாகவும், போலீசார் அவர்களிடம் விவரங்களைக் கேட்டபோது, அவர்கள் உதவி லோகோ பைலட்கள் என்று தெரியவந்ததாகவும் அவர் கூறினார். மேலும், “அவர்கள் மிகவும் இளைஞர்களாக இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் பயணச்சீட்டு பரிசோதகருக்கு அவர்கள் லோகோ பைலட்கள் என்று தெரியப்படுத்தி அதிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்ததால் அவர்கள் எந்த டிக்கெட்டையும் வாங்கவில்லை. நாங்கள் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றோம், விசாரணைக்குப் பிறகு, நாங்கள் ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தோம்” என்று சுனில் குமார் கூறினார்.
லோகோ பைலட்டாக ஆள்மாறாட்டம் செய்து, மாற்றுத் திறனாளி கோச்சில் பயணம் செய்ததற்காக ஈராட்டில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எஃபாரில் தற்போது பெருந்துறையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 17 வயது சிறுவன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு அரசு கண்காணிப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"