திருமுருகன் காந்தி : ஒரு வழக்கிற்கு ஜாமீன்… மற்றொரு வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊபா சட்டத்தின் கீழ் எப்படி திருமுருகனை கைது செய்ய முடியும் என நீதிபதி கேள்வி…

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை முதன்மை நீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் தடையை மீறி ஊர்வலம் நடத்தியதிற்காகவும், கலவரத்தை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பியதிற்காகவும் அவர் மீது கடந்த வருடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் திருமுருகன்.

இந்த மனுவின் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி சுபா தேவி திருமுருகன் காந்திக்கு தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கில் ஜாமீன் கொடுத்துள்ளார்.

இருப்பினும் திருமுருகன் மீது பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி கைது

தடையை மீறி ஊர்வலம் நடத்தப்பட்ட வழக்கினைப் போலவே, திருமுருகன்  மீது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதை தடுக்கும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட அவ்வழக்கிற்காக நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி ரோஸ்லின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், திருமுருகன் காந்திக்கு ஆதரவாக வக்கில் என்.ஆர். இளங்கோ மற்றும் வக்கீல் பெரியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகனை கைது செய்ய வேண்டிய நோக்கம் என்ன காவல்துறையினரிடம் கேள்விகள் கேட்டனர்.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தியை கைது செய்ததிற்காக காவல்துறையினர் திருமுருகன் காந்திக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

எதன் அடிப்படையில் ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகனை கைது செய்ய முடியும் என்று கேட்ட நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் விசாரித்து வழக்கை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uapa case on thirumurugan gandhi will be heard on sep

Next Story
விஜயகாந்த் நலமாக இருக்கிறார் : தேமுதிக அறிக்கைVijayakanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express