திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை ஒட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் சின்னியம்பாளையத்தில் (81) ஜோடிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தலைமையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்ச்சியில் தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 விதமான பொருள்கள் புது திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயற்திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலை வகித்தார்.
இதில், இளைஞரணி மாநில துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்பி நாகராஜ், எம்.எல்.ஏ.க்கள் பா.அருண்குமார், கோவை செல்வராஜ் மற்றும் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/