Udayanidhi Raised vck flag : தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட உதயநிதிஉ ஸ்டாலின் நேற்றைய தினம் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை உயர்த்தி பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 18 சட்டசபைகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.விசிக சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் (தனி) தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் து.ரவிக்குமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் விசிக-க்கு ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு செல்லாமல் புறகணிப்பதாக சர்ச்சை ஒன்று அண்மையில் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து 2 தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திமுக கூட்டணி கட்சிகளின் கொடி அந்தரத்தில் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர்கள் சிலர் திமுக கொடியுடன் பறந்துக் கொண்டிருந்த விசிக கொடியை அறுத்து வீசினர். இந்த சம்பவம் விசிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிரூப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இதுக் குறித்து விசிக - மற்றும் திமுக இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் விசிக கொடியை பிரச்சாரத்தில் கேட்டு வாங்கி உயர்த்தி பிடித்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை கேட்டு வாங்கி கையில் பிடித்த
- உதயநிதி ஸ்டாலின் #Thiruma4Chidambaram #Thirumavalavan #VCK #Chidambaram #Vote4Thirumavalavan #DMK #DMKAlliance #Congress #Vote4VCK @arivalayam @Udhaystalin @mkstalin @KanimozhiDMK pic.twitter.com/RPJLbj3wQ1
— Thol.Thirumavalavan (@thirumaofficial) 10 April 2019
விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவ இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.