Advertisment

ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் போல் இருக்க வேண்டாம்... மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி உதயசூரியன் திருமண விழாவில் இன்று (அக்.30) கலந்துகொண்டார்.

author-image
WebDesk
Oct 30, 2022 23:51 IST
New Update
Udayanidhi Stalin advised the newly wed couples not to be like OPS and EPS

திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்,ஏ., உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்,ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் திருமண விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மணமக்களை பார்த்து நீங்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்லிவிடுகிறேன்.

Advertisment

தயவுசெய்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., போல் இருக்க கூடாது என்றார். இதைக் கேட்டதும் திருமண விழாவில் கூடியிருந்தவர்கள் சப்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.

பின்னர் சிரித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், “இங்கிருந்து சாலை வழியாக செல்கிறேன். தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன்” என்று கூறி விடைப் பெற்று சென்றார்.

திருமண விழாவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., குறித்து உதயநிதி ஸ்டாலின் அரசியல் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu #Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment