மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டார். மேலும், ‘வீல் ஆப் பிரதர்குட் என்கிற பைக்கர்ஸ் குழுவைச் சேர்ந்தவர் குழந்தைகளோடு கலந்துரையாடினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: “சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைத்தது போல, மற்ற கடற்கரைகளிலும் நடைபாதை அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளைக் கொண்ட சிறப்பு பேருந்துகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வருவதற்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகள் கொண்டவாறு தரம் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil