Advertisment

Tamil News : இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News : இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு

Advertisment

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



  • 21:03 (IST) 14 Dec 2022
    எல்லை மோதல்: மகாராஷ்டிரா, கர்நாடகா முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை

    எல்லை மோதல் தொடர்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை மேற்கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டதாக அமித்ஷா பேட்டி அளித்தார்.



  • 20:10 (IST) 14 Dec 2022
    ‘பப்புவைக் மேற்கு வங்கத்தில் காணலாம்’ திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கு நிர்மலா சீதாராமன் பதில்

    மத்திய அரசின் தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டிய திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா, பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக விமர்சித்தார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் (பட்ஜெட் தாக்கல் செய்யும் மாதம்) பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது. மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய் என்று குறிப்பிட்ட மஹுவா மொய்த்ரா, 8 மாதங்களாகப் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது. இப்போது பப்பு யார் சொல்லுங்க” என்று கேள்வி எழுப்பினார்.

    திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பேச்சுக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பப்புவைக் மேற்கு வங்கத்தில் காண முடியும் என்று பதிலளித்துள்ளார்.



  • 20:04 (IST) 14 Dec 2022
    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? அதை தடுப்பதற்கு மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

    மத்திய அமைச்சர அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2021ம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது என்றார்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020ம் ஆண்டு 6,630 ஆகவும், 2021ம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.



  • 19:35 (IST) 14 Dec 2022
    யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு

    கடலூரில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



  • 18:22 (IST) 14 Dec 2022
    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 18:19 (IST) 14 Dec 2022
    டிஎன்பிஎஸ்சி - புதிய அலுவலர் நியமனம்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • 17:43 (IST) 14 Dec 2022
    டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு

    கடலூரில் யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் வருகையால் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது



  • 16:56 (IST) 14 Dec 2022
    17% நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு - மத்திய அரசு

    நடப்பு நிதியாண்டில் 17% நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • 16:30 (IST) 14 Dec 2022
    டிசம்பர் 15ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் டிசம்பர் 15ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதியை நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 16:09 (IST) 14 Dec 2022
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ரசிகர்களால் போக்குவரத்துக்கு இடையூறு; போலீஸ் விரட்டியடிப்பு

    கடலூர், புதுப்பாளையம் அருகே யூடியூபர் டிடிஎஃப் வாசனை பார்க்க வந்தவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கலைந்து போக சொல்லியும் கேட்காத நிலையில் போலீசாரால் விரட்டியடித்தனர். ஹெல்மெட் போடாமல் வந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 15:48 (IST) 14 Dec 2022
    ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து -ஐகோர்ட்

    சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்பதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக, கோவை ஈஷா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 15:21 (IST) 14 Dec 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - காயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவியின் உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்டோரும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.



  • 15:14 (IST) 14 Dec 2022
    தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது



  • 14:30 (IST) 14 Dec 2022
    விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்.. உதயநிதி

    என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்- உதயநிதி



  • 14:01 (IST) 14 Dec 2022
    உதயநிதிக்கு, சந்தானம் வாழ்த்து

    அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சந்தானம் ட்வீட்டரில் வாழ்த்து



  • 13:45 (IST) 14 Dec 2022
    மழைக்கு வாய்ப்பு

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.



  • 13:44 (IST) 14 Dec 2022
    திமுகவினர் இன்று நட த்தியது அமைச்சரவை மாற்றமா

    திமுகவினர் இன்று நட த்தியது அமைச்சரவை மாற்றமா அல்லது முடி சூட்டு விழாவா? அதிமுக மிகப்பெரிய வலிமையுடன் புதிய அவதாரம் எடுக்கும் காலம் விரைவில் வரும், அந்த பணியினை நானே முன்னின்று நிறைவேற்றி காட்டுவேன் என சசிகலா கூறியுள்ளார்.



  • 13:28 (IST) 14 Dec 2022
    பாரத் ஜோடா யாத்திரை

    ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்



  • 13:25 (IST) 14 Dec 2022
    ஆசிட் வீச்சு

    டெல்லி, துவாரகா பகுதியில் 17 வயது பெண் முகத்தில் ஆசீட் வீசிய வழக்கில், சிசிடிவி காட்சி அடிப்படையில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



  • 12:51 (IST) 14 Dec 2022
    சென்னை மேயர் பிரியா வாழ்த்து

    "அமைதியாய் இருந்தாலும்..அடக்கமாய்த் திகழ்ந்தாலும்.. அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்"

    அமைச்சராக பொறுபேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பிரியா ட்விட்டரில் வாழ்த்து



  • 12:39 (IST) 14 Dec 2022
    பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    சென்னை, பெரியார் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    பெரியார் திடலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி



  • 12:08 (IST) 14 Dec 2022
    அன்புத் தம்பி உதயநிதிக்கு வாழ்த்துகள் - ரஜினி

    தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் - ரஜினிகாந்த் ட்விட்



  • 12:00 (IST) 14 Dec 2022
    முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் உதயநிதி முதல் கையெழுத்து

    அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் கோப்பு

    முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து கையெழுத்து

    வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்து

    துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ.4 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



  • 11:55 (IST) 14 Dec 2022
    ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

    அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து



  • 11:20 (IST) 14 Dec 2022
    அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

    அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

    தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செய்த பின், தலைமைச்செயலகம் புறப்பட்டார் உதயநிதி



  • 10:54 (IST) 14 Dec 2022
    11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 10:52 (IST) 14 Dec 2022
    11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 10:34 (IST) 14 Dec 2022
    கனிமொழி வாழ்த்து



  • 10:28 (IST) 14 Dec 2022
    கமல் தயாரிக்கும் படத்திருந்து விலகிவிட்டேன்

    கமல் தயாரிக்கும் படத்திருந்து விலகிவிட்டேன். இனி அரசியல் மட்டும்தான். மாமன்னன் தான் எனது கடைசி படம் - உதயநிதி



  • 10:24 (IST) 14 Dec 2022
    கமல் தயாரிக்கும் படத்திருந்து விலகிவிட்டேன்

    கமல் தயாரிக்கும் படத்திருந்து விலகிவிட்டேன். இனி அரசியல் மட்டும்தான். மாமன்னன் தான் எனது கடைசி படம் - உதயநிதி



  • 10:12 (IST) 14 Dec 2022
    உள்ளங்கவர் உதயநிதி :வைரமுத்து ட்வீட்

    உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்



  • 10:02 (IST) 14 Dec 2022
    விளையாட்டு துறை அமைச்சர்

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.



  • 09:46 (IST) 14 Dec 2022
    அமைச்சர் உதயநிதி ட்வீட்

    எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்

    அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். - அமைச்சர் உதயநிதி ட்வீட்



  • 09:44 (IST) 14 Dec 2022
    அமைச்சர் உதயநிதி ட்வீட்

    எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்

    அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். - அமைச்சர் உதயநிதி ட்வீட்



  • 09:42 (IST) 14 Dec 2022
    உதயநிதி ஸ்டாலின் எனும் நான்

    அன்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது சொன்னது. இன்று உதயநிதி அதை சொல்லியே பதவியேற்றார்.



  • 09:40 (IST) 14 Dec 2022
    பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்

    "சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப் பற்றையும் கொண்டிருப்பேன்" . உறுதிமொழி ஏற்று அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்



  • 09:34 (IST) 14 Dec 2022
    உதயநிதி ஸ்டாலின் எனும் நான்

    பதிவு பிரமான உறுதிமொழியை வாசித்தார் உதயநிதி. அமைச்சராக பொறுப்பேற்றார்.



  • 09:28 (IST) 14 Dec 2022
    மு.க.ஸ்டாலின் வருகை

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை



  • 09:28 (IST) 14 Dec 2022
    வாழ்த்து பெற்ற உதயநிதி

    பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி



  • 08:48 (IST) 14 Dec 2022
    உதயநிதி பணியாற்றிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைத்தது

    உதயநிதி பணியாற்றிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைத்தது; அமைச்சர் பதவியையும் சிறப்பாக செய்வார் என நம்புகிறோம்; உதயநிதி தொட்டதெல்லாம் வெற்றியே என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment