Udayanidhi stalin Press Meet : சென்னையில் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை பேசியிருக்கிறாரே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த உதயநிதி, “இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டும்? அ.தி.மு.க தலைவர்களிடம்தானே கேட்க வேண்டும்? எங்களுக்கு யார் என்றாலும் ஒன்றுதான். எங்களின் தலைவரின் வழிகாட்டுதலில் நாங்கள் நடப்போம்” என்றார்.
தொடர்ந்து, திமுகவுக்கு யார் போட்டி என்பதில் பெரிய போட்டி நடக்கிறது” என்றும் கூறினார்.
இதையடுத்து, நந்தனார் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டில் சாதிய பிரச்னைகள் அதிகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளாரே எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, “ஆளுநர் மற்ற மாநிலங்களை பார்க்கிறாரா? இல்லையா? இங்கு இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் தேவை இல்லாத அரசியல் பேசிவருகிறார். அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேசிய உதயநிதி, “உங்களுக்கு என்னென்ன தேவையோ அதனை முதலமைச்சர் செய்து கொடுப்பார்” என்றார்.
அமலாக்கத் துறை ரெய்டு குறித்து பேசிய உதயநிதி, “தேர்தல் நெருங்குவதால் அமலாக்கத்துறை விருந்தாளி போல் வருவதாக கூறினார்.
இந்த நிலையில் சனாதனம் குறித்த கேள்விக்கு, “அதை இன்னுமா விடவில்லை” என்று கூறினார். மேலும் இது திசை திருப்பும் முயற்சி. தேர்தலுக்கு அப்புறம் பேசுவோம்” என்றார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“