கட்சி சின்னத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்ற உதயநிதி – நடவடிக்கை கோரி அதிமுக புகார்

TN Election news in tamil, udhaya nidhi stalin violating poll code: உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்பொழுது உதயநிதி அவரது கட்சியின் சின்னம் பொறித்த சட்டையை அணிந்திருந்தார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது

author-image
WebDesk
New Update
கட்சி சின்னத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்ற உதயநிதி – நடவடிக்கை கோரி அதிமுக புகார்

திமுக-வின்  இளைஞர்  அணி  செயலாளர்  உதயநிதி  ஸ்டாலின் , முதன்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி  தொகுதியில் களம் காண்கிறார்.

Advertisment

இருப்பினும், இவர் தான் போட்டியிடும் தொகுதி மட்டுமல்லாது  தமிழகம்  முழுவதும்  திமுக-விற்காக தீவிர பிரச்சாரம் செய்தார். அவ்வாறு தேர்தல் பரப்புரைகளின் போது அவரது கட்சியின் சின்னம் பொறித்த சட்டையை அவர் அணிந்து வந்தார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து இன்று தமிழகம் எங்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்பொழுது உதயநிதி அவரது கட்சியின் சின்னம் பொறித்த சட்டையை அணிந்திருந்தார்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.  வாக்குச்சாவடிக்கு  200 மீட்டர் தொலைவில் தான்  சின்னத்தை  பயன்படுத்த  வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி.  ஆனால், உதயநிதி தனது கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்குச்சாவடிக்கு சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Udhayanidhi Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: