scorecardresearch

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடுதான் மு.க. ஸ்டாலின் இலக்கு; வீடியோ வெளியிட்ட உதயநிதி

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடுதான் மு.க. ஸ்டாலின் இலக்கு என அமைச்சர் உதயநிதி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Awareness on Narcotics
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்கும் விதமாக, “ட்ரக் ப்ரீ தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
இதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் போதைப் பொருள் ஒழிப்பு என்பது நமது தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “#SayNoToDrugs எனும் முழக்கத்தை முன்வைத்து
@avadipolice ஏற்பாட்டில் போரூர் @SRMC_official வளாகத்தில் வரும் 14ஆம் தேதியன்று நடைபெறவுள்ள Triathlon& Duathlon போட்டிகளில் பங்கேற்போம். போதைப்பொருளில்லா தமிழ்நாடு எனும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவோம்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi awareness on narcotics

Best of Express