Udhayanidhi praises Stalin for take Dhiravida model class to Modi: மேடையில் பிரதமர் மோடிக்கே பாடம் எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பாசறைக் கூட்டத்தை தொடங்கி திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. அதுவும் கலைஞரின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். அவருடைய எண்ணம் தான் நம்மை இன்னும் வழிநடத்தி செல்வதாக நினைக்கிறேன்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் எழுத்துகள் நம்மிடம் உள்ளன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நம் தலைவரின் சாதனைகளும் உள்ளன. நம் கொள்கைகளை சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் நம் பணி. அதற்கான பாசறையை தான் தற்போது ஆரம்பித்துள்ளோம்.
இதையும் படியுங்கள்: அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால்… அண்ணாமலையை கிண்டல் செய்த அமைச்சர் மா.சு
இன்று பலபேர் திராவிட மாடல் ஆட்சி குறித்து விளக்கங்கள் என்று கேட்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து நான் ஒரு சிறிய விளக்கத்தை சொல்கிறேன். 10 நாட்களுக்கு முன்பு, சென்னைக்கு பிரதமர் மோடி வந்திருந்தபோது, அவரை மேடையில் வைத்துக் கொண்டே, திராவிட மாடல் என்பது என்ன? என பாடம் எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதமாகக் கூறினார்.
பின்னர், மாநில சுயாட்சிக் குறித்தும், மாநிலத்திற்கு எது தேவை. எது தேவையில்லை என்பது குறித்தும், இந்தியாவிலேயே பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே பேசிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil