chennai-flood | udhayanidhi-stalin | டிசம்பர் முதல் வாரத்தில் வீசிய மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.
இதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு டோக்கன் பெறாத நபர்களுக்கு மழை வெள்ள நிவாரணம் வழங்கப்படுமா? என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த உதயநிதி, “டோக்கன் பெற முடியாத நபர்களுக்கும் ஒரு வாரத்தில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். டோக்கன் பெற முடியாதவர்களுக்கு உதவ ரேஷன் கடை அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி மையங்களில் விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என அமைச்சர் உதயநிதி பதிலளித்தார்.
முன்னதாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“