Advertisment

நான் மக்களைச் சந்தித்து பதவிக்கு வந்தேன்; ஜெய் ஷா எப்படி பி.சி.சி.ஐ தலைவரானார்? அமித் ஷாவுக்கு உதயநிதி பதிலடி

உங்கள் மகன் ஜெய்ஷா பி.சி.சி.ஐ தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? – அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி

author-image
WebDesk
New Update
Udhayanidhi saying that we will not be afraid of the enforcement department

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ அமைப்பிற்கு எப்படி தலைவரானார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

தி.மு.க. இளைஞர் மாநில அணி, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: முதல் முறையாக அரசு நிகழ்ச்சியில் இன்ப நிதி: ஸ்டாலின், உதயநிதியுடன் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நேற்று ராமேசுவரத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னைப் பற்றி பேசி இருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் நமது கழகத் தலைவர் மு.க ஸ்டாலினின் லட்சியமாம். நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகி, இப்போது அமைச்சராகியுள்ளேன்.

நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க (பி.சி.சி.ஐ) தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.75 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி அவருக்கு எப்படி வந்தது? இதற்கு நமது மத்திய உள்துறை அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்.. மகனைப் பற்றிப் பேச முடியாமல் அவர் என்னைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார், என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக ராமேஸ்வரத்தில் நேற்று, அண்ணாமலை பாத யாத்திரையை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அமித் ஷா, நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க அரசு தான் என தி.மு.க.,வைக் கடுமையாக விமர்சித்தார். ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை ஏன் அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தி.மு.க.,வினருக்கு உதயநிதியை முதல்வராக்குவது லட்சியம். காங்கிரசாருக்கு ராகுலை பிரதமர் ஆக்குவது லட்சியம். அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லை. தங்கள் குடும்பம் குறித்து மட்டுமே அக்கறை என்றும் அமித் ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Amit Shah Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment