/indian-express-tamil/media/media_files/83pn38rDipCKhvdnLPLc.jpg)
டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் வீட்டில், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.4,2024) சந்தித்தார்.
கேலோ விளையாட்டுப் போட்டிகளின் அழைப்பிதழ்கள் வழங்க தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.4,2024) டெல்லி வந்திருந்தார்.
தொடர்ந்து அவர் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் வீட்டில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
இந்தச் சந்திப்பு சில நிமிடங்கள் நடந்தது. தொடர்ந்து, ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் ராகுல் காந்தியை உதயநிதி சந்தித்தார்.
Glad to have invited Hon’ble Indian Prime Minister, Thiru @narendramodi in New Delhi today for the Opening Ceremony of the Khelo India Youth Games to be held in Chennai on January 19th, 2024.
— Udhay (@Udhaystalin) January 4, 2024
On behalf of the Tamil Nadu Government, I requested the Prime Minister for the… pic.twitter.com/p3rYnUxmqX
இந்தச் சந்திப்பு முடிந்து திரும்பிய உதயநிதியிடம் செய்தியாளர்கள் பிரதமர் மோடியை சந்தித்து என்னப் பேசினீர்கள் என கேள்வியெழுப்பினார்கள். அதற்கு காரில் அமர்ந்தபடி பதிலளித்த உதயநிதி, “வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக் கோரி பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.
இந்தச் சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு, “அரசியல் எதுவும் பேசப்படவில்லை” என்றார். தொடர்ந்து, கேலோ போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.