அரசுப் பள்ளிகளில் சமூக நீதி பாடல்; உதயநிதி கோரிக்கை

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதி பாடல் ஒலிபரப்ப வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதி பாடல் ஒலிபரப்ப வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
School student tamil nadu

அரசு பள்ளிகளில் சமூக நீதிப் பாடல் ஒளிபரப்ப வேண்டும் என உதயநிதி கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 udhayanidhi-stalin | anbil-mahesh | "அனைத்து அரசு பள்ளிகளிலும் இறை வணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதிப் பாடல் ஒளிபரப்ப வேண்டும்" என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி? 

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்த கையோடு உதயநிதி ப்ரோமோஷன் பணிகள் நடப்பதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதியிடம்,  துணை முதலமைச்சர் ஆகிறீர்களா என்ன செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த உதயநிதி, " முதல்வர் தான் இது குறித்து முடிவு எடுப்பார்" எனக் கூறியுள்ளார். இந்தக் கேள்வியை உதயநிதியிடம் இதற்கு முன்பும் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், " எனக்குத் தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரிகிறதே; எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள்" என்பார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி தற்போது இது குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார் என கூறியுள்ளார். இதனால் மு.க ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆகுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: