scorecardresearch

தஞ்சையில் விளையாட்டு நகரம்: விரைவில் அறிவிப்பு வெளியாகும்: உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூருக்கு அருகே உள்ள செங்கிபட்டியில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது என்று கல்வித் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் விளையாட்டு நகரம்: விரைவில் அறிவிப்பு வெளியாகும்: உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூருக்கு அருகே உள்ள செங்கிபட்டியில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது  என்று கல்வித் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் விளையாட்டு நகரம் அமைக்க நிலம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது, இது தொடர்பாக கூடியவிரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ‘ விளையாட்டு துறையை மேம்படுத்த அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்க வேண்டும். இளைஞர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க தேவைப்படும் கோரிக்கையை இந்த சட்டமன்ற தொடரில் பேச உள்ளோம்.

முதலமைச்சர் கோப்பை , தொடர்பான பல்வேறு போட்டிகள், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. ரூ.25 கோடி செலவில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. எல்லா விளையாட்டு போட்டியின் இறுதி சுற்றும் சென்னையில் நடைபெறும். முதல்வர் ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குவார்.

தஞ்சாவூருக்கு அருகே உள்ள செங்கிபட்டியில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக பார்வையிட நான் வந்திருக்கிறேன். இது தொடர்பாக கூடிய விரைவில் அறிவுப்பு வெளியாகும்’ என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi says that news announcement will be made soon on sports city