/tamil-ie/media/media_files/uploads/2023/08/Udhay.jpg)
உதயநிதி ஸ்டாலின்
சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்பது கொசு, மலேரியா, ப்ளூ, டெங்கு போன்றது. அதை அழிக்க வேண்டும் எனப் பேசியதாக செய்தி ஒன்றை பகிர்ந்து சட்ட உரிமை கண்காணிப்பகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our… https://t.co/nSkevWgCdW
— Udhay (@Udhaystalin) September 2, 2023
இதை ரீ-ட்வீட் செய்துள்ள உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்.
நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்.
திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.