Advertisment

சனாதன சர்ச்சை: உதயநிதி பேச்சு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Udayanidhi Stalin advised the newly wed couples not to be like OPS and EPS

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பேசிய போது, சனாதனம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

இவரது பேச்சு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சிபிஐ விசாரிக்க  வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகன்நாதன்  என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக  அமைச்சர் உதயநிதியும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கெற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ்  பிறப்பித்து உத்தரவிட்டு  இருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment