இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை 3.30 மணிக்கு துணை முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதோடு தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. அமைச்சர்கள், தலைவர்கள் எனப் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் விமர்சனங்களும் வந்தன. அதையும் வரவேற்கிறேன். எனது பணிகளின் மூலம் அதற்கு பதிலளிப்பேன்.
ஏற்கனவே அமைச்சராக பணி செய்து வருகிறன். இது எனக்கு கூடுதல் பொறுப்பு. மூத்த தலைவர்கள், அமைச்சர்களின் வழிகாட்டுதலில் இப்பணியையும் சிறப்பாக செய்வேன் என நம்பிக்கை உள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“