தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் திருவண்ணாமலை வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ.2) காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமாக கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் உள்ளன.
இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தச் சோதனை நடந்துவருகிறது.
இதற்கிடையில் சென்னையிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை நடந்துவரும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக வருமான வரித்துறை (IT) மற்றும் அமலாக்கத்துறை (ED) போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன” எனக் குற்றஞ்சாட்டினார்.
நீட் குறித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் நீட் விலக்கு கோரி கையெழுத்து பெற திட்டம் உள்ளது” என்றார்.
மேலும், “விசாரணை அமைப்புகளின் சோதனையை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“