அஜித் புதிய சாதனை; தமிழகத்திற்கு பெருமை: பாராட்டிய உதயநிதி

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

author-image
WebDesk
New Update
Ajith Racing

சென்னை: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற கிரென்டிக் 24எச் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025 (Creventic 24H European Endurance Championship Series 2025) கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணி ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடத்தைப்  பிடித்து சாதனை படைத்தது. 

Advertisment

இந்த வெற்றிக்காக அஜித்துக்கும், அவரது குழுவினருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் தளத்தில் வாழ்த்துகளையும், தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், 

நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.

Advertisment
Advertisements

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!” என்று வாழ்த்தியுள்ளார்

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: