Advertisment

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்; உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship Act in context of Tamil Nadu’s politics, refugees’ issue

Citizenship Act in context of Tamil Nadu’s politics, refugees’ issue

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சட்ட நகலை எரித்ததாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 644 திமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment
13, 2019

1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியவுடன் இது அமல்படுத்தப்படும்.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து இந்த பேரணியானது தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழர்களை முழுவதுமாக புறம்தள்ளியுள்ள அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

13, 2019

இதற்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஏராளமான இளைஞரணியினர் கொடி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் நடந்து சென்றார்.

13, 2019

அவருடன் அன்பகம்கலை, ஜின்னா, வி.எஸ்.ராஜ், மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சிற்றரசு உள்பட ஏராளமான இளைஞரணி நிர்வாகிகள் கண்டன முழக்கம் எழுப்பியபடி நடந்து சென்றனர். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

13, 2019

'கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். குடியுரிமை மசோதாவை கண்டிக்கிறோம்', 'காப்பாற்று, காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று', 'இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே', 'திரும்ப பெறு, திரும்ப பெறு, குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறு' என மத்திய அரசுக்கு எதிராக அவர்களது கோஷம் இருந்தது.

13, 2019

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்து எறிந்தார். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட உதயநிதியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதனைப்போலவே மதுரை பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பவானியில் திமுக இளைஞர் அணி சார்பில் குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து மாநிலம் முழுவதும் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சட்ட நகலை எரித்ததாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 644 திமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment