தி.மு.க-வை குடும்பக் கட்சி என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி, பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் அமித்ஷா மகன் ஜெய்ஷா எத்தனை ரன்கள் அடித்துள்ளார்” என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க-வை குடும்பக் கட்சி என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். பி.சி.சி.ஐ-யில் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க-வை குடும்பக் கட்சி என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருக்கும் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் பதவி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
ராமேசுவரத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாரிசு அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தி.மு.க-வை குடும்பக் கட்சி என்றும் கூறினார்.
சென்னையில் தி.மு.க இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதாகவும், அதன் பிறகு தான் அமைச்சராகவும் பதவியேற்றதாகவும் கூறினார்.
“என்னை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சித் தலைவர்களின் நோக்கம் என்று அமிதஷா கூறியுள்ளார். ஆனால், உங்கள் மகன் எப்படி பி.சி.சி.ஐ செயலாளராக ஆனார் என்று அமித்ஷாவிடம் கேட்க விரும்புகிறேன்?” என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
“ஜெய்ஷா எத்தனை கிரிக்கெட் மேட்ச் விளையாடினார், எத்தனை ரன்கள் எடுத்தார்?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி இதற்கு அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"