'கலைஞரின் பேரன்; கடைக்கோடி தொண்டன்': உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

திமுக தலைவர் ஸ்டாலின் மகன், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திமுக தொண்டர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

udhayanidhi stalin birthday , உதயநிதி ஸ்டாலின்

1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சென்னையில் பிறந்தார் உதயநிதி. இவர் தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலுனுக்கு மகன் மற்றும் மறைந்த முன்னால் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் ஆவார். உதயநிதியின் குடும்பத்தினர் அனைவருமே 1960களில் இருந்தே அரசியல் வாழ்வில் தீவிர ஈடுபாட்டி உள்ளவர்கள்.

udhayanidhi stalin birthday, udhayanidhi stalin birthday , உதயநிதி ஸ்டாலின்

2002ம் ஆண்டு இன்பாக்ஸ் 1305 என்ற பத்திரிக்கை நடத்தி வரும் கிருத்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

திரையுலகில் உதயநிதி ஸ்டாலின்

2008ம் ஆண்டு விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான குருவி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு வெளியான ஆதவன் மற்றும் 2010ம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தையும் தயாரித்துள்ளார்.

udhayanidhi stalin birthday, udhayanidhi stalin birthday , உதயநிதி ஸ்டாலின்

2012ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக கால் பதித்தார். ஹன்சிகாவின் ஜோடியாகவும், சந்தானத்தின் நண்பனாகவும் இவர் நடித்திருந்த காமெடி ரொமேன்ஸ் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்படத்திற்காக “சிறந்த அறிமுக நடிகர்” என்ற சைமா விருதையும் உதயநிதி பெற்றார்.

udhayanidhi stalin birthday, udhayanidhi stalin birthday , உதயநிதி ஸ்டாலின்

இதனை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்மேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது உருவாக்கத்தில் உள்ள கண்ணே கலைமானே மற்றும் 7 கிணறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

சமீபத்தில் கஜா புயல் தாக்கியதில் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனையொட்டி, தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் அந்த கொண்டாட்டத்திற்கு பதில் நற்பணிகளை செய்யுமாறும் தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டார்.

udhayanidhi stalin birthday, udhayanidhi stalin birthday , உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் தொண்டர்கள் இவரின் பேச்சை ஏற்றுகொண்டு புயல் பாதிப்பு பகுதிகளில் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இணையத்தளம் முழுவதும் திமுக தொண்டர்கள் பலரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close