நீங்கள் நிரூபித்தால் பா.ஜ.க.வில் சேர்ந்து விடுகிறேன் : உதயநிதி ஸ்டாலின் பகிரங்க டுவீட்

திமுகவின் டிரஸ்டில் தான் இருப்பதை நிரூபித்தால், பாஜகவில் சேர்ந்துவிட தயார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

திமுகவில் உள்ள மூத்த தலைவர்களை சிலரை பின்னுக்கு தள்ளி உதயநிதி ஸ்டாலின் கட்சியின் முக்கிய பதவியை பிடிக்க முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், சமீபத்தில் பாஜக வலுவாக இருக்கும் மாநிலமான உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியாங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என்று ஏற்கனவே கூறி வரும் நிலையில், இதனை பாஜகவும் விமர்சனம் செய்திருக்கிறது.

பாஜக ஆதரவாளர் குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

அதே சமயம், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக-வில் அரசியல் குடும்ப வாரிசுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.அந்த பட்டியலில் பாஜகவின் முக்கிய ஆட்களான ராஜ்நாத் சிங், சுஸ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, யஸ்வந்த் சின்ஹா, எடியூரப்பா ஆகியோரது படங்கள் வெளியானது.

இந்த விவகாரத்தில் வாக்குவாதங்களும் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாஜக ஆதரவாளர் எஸ்ஜி சூர்யா டுவிட்டரில் திமுகவை விமர்சித்து பதிவிட்டார். அதில், காங்கிரஸ் கட்சியில் ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா எனவும், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி எனவும் முடியாட்சி போல் வாரிசுகள் பதவி சுகத்தை பெறுகின்றனர்.

தமிழிசை, நிர்மலா சீதாராமன் போன்றோர் பதவி பெற இந்த கட்சிகளில் வாய்ப்பு இல்லை என்றும் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இதுதான் வித்தியாசம் என்றும் கூறியுள்ளார்.

இதனை கண்ட உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரிடம் ‘நான் முரசொலி டிரஸ்ட் மற்றும் திமுக டிரஸ்ட்டில் இருப்பதாக நீங்கள் நிரூபித்தால் உங்கள் நரேந்திர மோடி முன்னிலையிலேயே நான் பாஜகவில் இணைந்து மிகக்கொடுமையான தண்டனையை அனுபவிக்க தயார்’ என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close