சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல், தமிழகத்தை ஆள ஒரு கருத்தியல் தலைவர் தான் தேவை." என்று கூறியிருந்தார்.
பதிலடி
ஆதவ் அர்ஜுனாவின் கருத்து தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த உதயநிதி, "யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார்; அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு" என்று கூறினார்.
இதனிடையே, விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழா குறித்த கேள்விக்கு உதயநிதி, "சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை" என்று ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“