ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பையை காணவும், அங்குள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை பார்வையிடவும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார்.
16 உலக நாடுகள் கலந்துகொள்ளும் 15 வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் புனேஸ்வர், ரூர்லேகா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியை காண உதயநிதி ஒடிசா சென்றுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், செயல் இயக்குநர் காண்டர் ஸ்ரீவத்சா மற்றும் நிர்வாகிகள் விமாநிலையத்தில் வரவேற்றனர்.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து, ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மற்றும் பயன்பாட்டை கேட்டறிந்தார்.

இந்நிலையில் ஒடிசாவின் விளையாட்டுதுறை அமைச்சர் துஷார்கண்டி பெகரா மற்றும் அம்மாநில விளையாட்டுதுறை அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்து பேசினார்.