Advertisment

உதயநிதி கருத்து திரிப்பு: அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் திருச்சியில் வழக்குப் பதிவு

உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை (02.09.23)-ம் தேதி உதயநிதி பேசிய காணொளியினை திரித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
உதயநிதி

உதயநிதி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (02.09.23)-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சனாதன தர்மத்தை பற்றி பேசியதை, பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா,  உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை (02.09.23)-ம் தேதி உதயநிதி பேசிய காணொளியினை திரித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

 இவரின் இந்த பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,  தான் ஒருபோதும் பொதுமக்களின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும், கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதன தர்மம் சமுதாய தீங்கிற்கு பொறுப்பாகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

 இந்தநிலையில்,  அமைச்சர் உதயநிதியின் காணொளியினை திரித்து பதிவிட்ட பாஜக தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரன் என்பவர் கடந்த (06.09.23)-ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

 அந்த புகார் மனுவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி பேசியதை பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ட்விட் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின் சாராம்சத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், தெளிவாக பதிலளித்த பின்பும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசியல் சுய லாபத்திற்காகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், சகோதரதுவத்தின் மாண்பினை குலைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்றும், ஆகவே அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என காவல் ஆணையர் காமினியிடம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் அமித் மாளவியா என்பவர் மீது மாநகர குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) இ.த.ச.வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஜக தேசிய பிரமுகர் மீது திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment