’இளவரசர் வருகிறார்’ தவறு என ஒப்புக்கொண்ட உதயநிதி..இது முதல் முறையல்ல!

தொண்டர்கள் செய்யும் தவறுக்கு உதயநிதி பொறுப்பேற்று பதில்

பேனர் விவகாரத்தில் தவறுகள் இனி நடக்காது என்று நடிகரும், திமுக தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இளவரசர் வருகிறார் :

சென்னை வானகரம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைகளின் குறுக்கே பேனர்கள் வைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி திமுக தரப்பில் வைக்கப்படிருந்த பேனரை விமர்சித்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்தது.

அதில்,‘வானகரத்துக்கு இளவரசர் வர்றாராம். எந்த ஊறு இளவரசர்? பேனர் வேண்டாம் பேனர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே பேனர் வைத்துக் கொள்வது ஒரு கலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.அறப்போர் இயக்கம் பதிவிட்டுள்ள ட்விட்டிற்கு பதில் கூறும் வகையில், “ தவறு.. மீண்டும் நடக்காது! என பதிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

இரண்டாவது தவறு:

இதேபோன்று ஏற்கனவே, திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் திமுக மூத்த தலைவர்கள் அருகே உதயநிதியின் புகைப்படம் இட்மபெற்றதை விமர்சித்து திமுக தொண்டர், உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதும் ,‘தவறு.. மீண்டும் நடக்காது..’ என்று உதயநிதி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவை திமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். தொண்டர்கள் செய்யும் தவறிற்கு உதயநிதி பொறுப்பேற்று பதில் அளித்துள்ளதாகவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close