/tamil-ie/media/media_files/uploads/2023/05/ud1.jpg)
மனைவியின் ட்வீட்டை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்
போலி செய்திகளை வெளியிடுபவர்கள், குறைந்த பட்சம் ஒரு நல்ல புகைப்படத்தை பயன்படுத்துங்கள் என்று கிருத்திகா உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னனி படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதே நாளில் கல்லல் குரூப் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தநிலையில், உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளை வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
— Udhay (@Udhaystalin) May 27, 2023
இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி ட்விட்டரில்' "என்னைப் பற்றி வதந்திகளை பரப்பும் நபர்கள், குறைந்தபட்சம் நல்ல புகைப்படங்களை பயன்படுத்துங்கள்" என அவர் ட்வீட் செய்துள்ளார் .
இந்நிலையில் இந்த ட்வீட்டை, உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு சிரிக்கும் ஸ்மைலியுடன், இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us